என்னைய ஏண்டா சேத்திங்க ??


இன்றாவது பதில் சொல்
என் கேள்விகளுக்கு
ஏன் ? எதற்காக ? சேர்த்தாய்
பொறியியல் கல்லூரியில் ?
ஏன் ? எதற்காக ? சேர்த்தாய்
இத்துறையில் ?
ஏன் ? எதற்காக ? சேர்த்தாய்
இக்கல்லூரியில் ?

இன்றாவது பதில் சொல்
என் கேள்விகளுக்கு
இன்று என் மௌன விரதத்தை
களைக்க ஆசைப்படுகிறேன்
வெறுத்துவிட்டேன்
ஏன் சேர்ந்தேன் என !
புரியவில்லை எதற்காக
படிக்கிறேன் என !
மரணத்தின் வலிலை
இதற்கு முன் உணர்ந்தது உண்டா ?
கூட்டதில் நடுவே
நிர்வாணம் படுத்தபட்டது போல்
என்னியது உண்டா ?
பல நாட்களாய்
தூக்கம் இல்லாமல் தவித்ததுண்டா ?
மனநலம் பாதிக்கப்பட்டவன்
போல் திறிந்ததுண்டா ?
தூக்கு கயிறை
முத்தமிட ஆசைப்பட்டதுண்டா ?
போச்சு உரிமையை
அடமானம் வைத்தது உண்டா ?
இது உனக்கு கேள்விகளாய்
மட்டும் படுகிறதா ??
இது அடையாளம் துளைத்த
மாணவனின் வலி

இன்றாவது பதில் சொல்
என் கேள்விகளுக்கு
பிடிக்கவில்லை எனத்தெரிந்தும்
சேர்த்துவிட்டிர்கள்
பிடித்தது எனத்தெரிந்தும்
வெருக்க செய்தீர்கள்
நான் என்ன செய்ய ??
என் நிலமை தெரியுமா உனக்கு ??
தூக்கு படுக்கையில் நீ
இன்னும் படுத்ததில்லை போலும்

Advertisements