நான் தண்டிக்க படவேண்டியவன் பாகம்-1

இன்று நான் இங்கு எதுவும் புதியதாக கூற போவதில்லை. ஆகையால் இதை விடமிகவும் முக்கியமான வேலை இருந்தால் அதில் நேரத்தை கழிக்கவும்.
இதைப்போல் கிறுக்க எப்படித்தான் தோன்றும் என்று தெரியவில்லை. என்றும் காணும் காட்சித்தான்.ஆனால் இன்று நான் பார்த்த பார்வை புதியதாக கூட இருக்கலாம்(தேர்வு நேரம் என்பதால் கூட இப்படி தோன்றி இருக்கலாம் ).

எங்கு,எப்படி,என தெளிவாக கூற முடியாத தர்ம சங்கடத்தில் நான் இருக்கிறேன்.ஓரே வார்த்தையில் கண்ணில் கண்ணீர் மமுங்க கூற வேண்டும் என்றால் குழந்தை தொழிலாளிகள்.ஆம் குழந்தை தொழிலாளிகள் தான்.நான் ஒன்றும் வெட்டி முடித்து விடவில்லை ஆனால் அப்படிப்பட்ட எனக்கு ஒரு குழந்தை உணவு பறிமாறிய காட்சி தான்.எனது விடுதியில் எனக்கு ஒரு குழந்தை உணவு பறிமாறிய காட்சி அதை பற்றி தான் இங்கு நான் கூற விரும்புகிறேன்.

அப்படியென்றால் அதைப்பற்றி எதுவும் புகார் சொல்லவில்லையா என கேள்வி எழ வேண்டும் அத்தகைய கேள்விக்கு எனது பதில் தற்போது நான் ஒரு சூழ்நிலை கைதியே ஆகும்.ஆத்தகைய இந்த சூழ்நிலை கைதியால் முடிந்த ஒரு வேலை பிறநாட்டுகளை விடுத்து நம் நாட்டு குழந்தை தொழிலாளிகளைப் பற்றி சேகரித்த சில விசியங்கள்.

குழந்தை தொழிலாளிகள்:
குழந்தை தொழிலாளிகள் என்று நாம் யாரை கூறிப்பிடுகிறோம் ? குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவரை (14 வயதுக்கு உட்பட்டவர்கள் ) வேலைக்கு சேர்த்து அவர்களின் உடல் நிலை அல்லது மனநிலைக்கு பாதிப்பு உண்டாக்குதலே ஆகும்.எப்படிபட்ட வேலைகள் ? பாலியல் தொழில்,குவாரி,விவசாயம்,பெற்றோரின் வேலைக்கு உதவுதல்,வணிகம் என அடிக்கி கொண்டே போகலாம்

காரணம்:
குழந்தை தொழிலாளிகள் உருவாக ஒரே காரணம் வருமை.பெற்றோரின் குடும்ப சூழ்நிலையே அவர்களது குழந்தையை வேலைக்கு அனுப்ப காரணமாக இருக்கிறது.

இது தொடரும்…

Advertisements