அவளுக்காக

love

என் அவளிடத்தில்
பொய்யாய் ஒரு காதல்
அவளை காதலிக்க செய்ய…

ஆகையால் இன்று முதல்…
நான் மாற நேறினேன்
அவளுக்கு சிரித்து பேசினாள்
பிடிக்காது என்பதலால்
சிரிக்க மறக்க வேண்டியதாயிற்று

அவளுக்கு என் பசி அடங்க
சாப்பிட்டால் பிடிக்காது
ஆகையால் என்
அரை வயிற்றை
பட்டினி போட வேண்டியதாயிற்று

அவளுக்கு எனக்கு பிடித்த
வண்ணங்ளில் உடுத்த பிடிக்காது
ஆகையால் அவளுக்கு
பிடித்த வண்ணங்களை
தேடி பிடிக்க வேண்டியதாயிற்று

இப்படி அவளுக்காக
ஒவ்வொன்றாக மாற மாற
என் காதல் பொய்த்து போனது
என நான் அறிவதற்கு
பல மாதங்கள் முன்னே
நான் போலியானதை
அறிந்து கொண்டேன்….

Advertisements

காதல் முகவரி

எனது பெயரை வாடகைக்கு வடும்
நேரம் வந்து விட்டது போலும்!
நி விட்டு சென்ற இடத்தில்
நான் இன்னும் அப்படியே!
நி இந்த நோய்க்கு
என்ன பெயர் சூட்டுவாய் ??
எனக்கோ முற்றிவிட்டது
தோழனாய் இருந்தது இனி காதலனாய்!
மாற்று மருந்து தேவை
அது நி கூறும் வார்த்தை அல்லவா ??
காத்துயிருக்கிறேன் காதலனாய்
இன்று முதல் !!

7. பொன்மொழி


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்
என்பதை உணரும்போது
சிலபேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நிறையப்பேர்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

–கண்ணதாசன்

காதல் காதல்தான்


காதலுக்குத்தான்
எத்தனை
மொழிகள்
அவள் என்னைவிட்டு
சென்றபோதும்
தொடர்கிறது
மௌனமாய்..