ஆண் பாவம்

அவள் செய்த தவருக்காக
இத்துடன் நூறாவது
மன்னிப்பையும்
கேட்டு விட்டேன்
-ஆண் பாவம்

Advertisements

அவளுக்காக

love

என் அவளிடத்தில்
பொய்யாய் ஒரு காதல்
அவளை காதலிக்க செய்ய…

ஆகையால் இன்று முதல்…
நான் மாற நேறினேன்
அவளுக்கு சிரித்து பேசினாள்
பிடிக்காது என்பதலால்
சிரிக்க மறக்க வேண்டியதாயிற்று

அவளுக்கு என் பசி அடங்க
சாப்பிட்டால் பிடிக்காது
ஆகையால் என்
அரை வயிற்றை
பட்டினி போட வேண்டியதாயிற்று

அவளுக்கு எனக்கு பிடித்த
வண்ணங்ளில் உடுத்த பிடிக்காது
ஆகையால் அவளுக்கு
பிடித்த வண்ணங்களை
தேடி பிடிக்க வேண்டியதாயிற்று

இப்படி அவளுக்காக
ஒவ்வொன்றாக மாற மாற
என் காதல் பொய்த்து போனது
என நான் அறிவதற்கு
பல மாதங்கள் முன்னே
நான் போலியானதை
அறிந்து கொண்டேன்….

என் காதலும் அலைப்பேசியும்

உனக்கும் எனக்கும்
உள்ள உறவுக்கு
எடுத்துக் காட்டுகளாய் கூற
ஆயிரம் ஆயிரம்
விசயங்கள்..

ஆயினும்
நான் பயன்படுத்தும்
காகிதமும்
கரு மையும்
என் மாத கணக்குள்
அடங்க மறுக்கிறது….

ஆகையால்
நம் உறவிற்கு உரமிட்டு
தூதுவனாய் தண்ணீர் ஊற்றி
இன்று மரமாய்
அல்ல காதலாய்
வளர செய்த
என் அலைப்பேசியை
மட்டும் எடுத்துக் கொண்டேன்

ஆம்
இன்னும்
நினைவிருக்கிறது
நான் அனுப்பிய
முதல் வாக்கியமும்
நீ அனுப்பிய
மறு மொழியும்
என் நெஞ்சில்
அழியா நினைவுகளாய்….

நாம்
இருவரும்
சந்திந்து உறவாடி
சிந்தித்துப் பேசியது
சில காலம் தான்
ஆனால்
நீ ஏற்றுக் கொண்டாய்
நமது உறவை
நட்பு என
முதல் உறையாடலிலே
அலைப்பேசியில்
ஆனால்
இன்று ஏன்
ஏற்க மறுக்கிறாய்
நட்பு என ??

ஆரம்பம் வெறும்
குறுஞ்செய்தியுடன்
இரு நாட்களுக்கு ஒரு முறை
அல்லது
வாரத்திற்கு இரு முறை
இன்று நீ
இல்லாத ஒரு
இரவும் ஏற்று கொள்ள
மறுக்கிறது
என் நெஞ்சம்..

நீ என்னுடன்
பேச விரும்பும் போ தெல்லாம்
சிறு சலசலப்பு உண்டாகிறது
எங்கிருந்து கொண்டு பேசுவாய் என!
ஆகையால் தானோ
நான் தனிமையில் பேச கற்று கொண்டேன்??

நட்பு
இச்சொல் இன்னும்
நீடிக்கிறது
நம் உறவுக்குள்
வெரும் வார்த்தைகளில்
மட்டும்…

நாம் சண்டையிடும்
நாட்களிளெல்லாம்
சிறு முத்திரை
நினை வூட்டியிருக்கிறது
இது அதற்கான நேரமல்ல என
நீயும் ஏற்று
கொள்வாய்
சிரித்தும் விடுவாய்
அதைப் பார்த்தவுடன் 🙂 ..

ஒவ்வொரு நாளும்
உன் பெயர்பலகை
மாறத்தான்
செய்கிறது
என் அலைப்பேசியில்
என்று அடங்கிவிடுவாய்
ஒரே வார்த்தையில்
என் மனைவியன ??

காதல் கடன்

    காதலுக்கும் காப்பீட்டுத்திட்டம்

    சீக்கிரம் கொண்டு வாருங்கள்

    ஆண்கள் பாவம்

    நீடிக்கிறது செலவுகள்

    மட்டும்