7. பொன்மொழி


அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்
என்பதை உணரும்போது
சிலபேர்
தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நிறையப்பேர்
காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

–கண்ணதாசன்

Advertisements

6.பொன்மொழி


கட்டுப்படுத்த முடியாத
ஆசையின் மீது
கட்டுப்படுத்த முடியாத
ஆசை வைப்பதே
காதல்

–மார்க் ட்வைன்

5.பொன்மொழி


காதல் என்பது நெருப்பு
உன் இதயம்
குளிர்காயப் போகிறதா
அல்லது
உன் வீடு
தீப்பற்றப் போகிறதா
என்பதை உன்னால்
தீர்மானிக்க முடியாது

-ஜோன் கிராபோர்டு

4. பொன்மொழி


ஒரு ஆண் தான் ஒரு
பெண்ணின் முதல்
காதலனாக இருக்க
விரும்புகிறான்
பெண்ணோ ஒரு ஆணின்
கடைசிக் காதலாக
இருக்க விரும்புகிறாள்

–ஆஸ்கர் ஓயில்டு

3.பொன்மொழி

நான் உன்னைக்
காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும்
அது.
சூரியன் குளிர்ந்துபோகும்
வரை
நட்சத்திரங்கள்
முதுமையடையும் வரை
நான் உன்னைக்
காதலிப்பேன்

–ஷேக்ஸ்பியர்