கடிகாரம்

நாங்கள் சேர
ஏத்தனை தடைகள்
ஆயினும் சேர்ந்து விடுகிறோம்
நாட்களுக்கு இருமுறை
நாங்கள் இருவரும்!

அட்சயப்பாத்திரம்

  அழகின்

  அட்சயப்பாத்திரமா நீ

  உன்னில் ஒரு பங்கு

  என்று எனக்கு கிடைக்கும்

காதல் கடன்

  காதலுக்கும் காப்பீட்டுத்திட்டம்

  சீக்கிரம் கொண்டு வாருங்கள்

  ஆண்கள் பாவம்

  நீடிக்கிறது செலவுகள்

  மட்டும்

காதல் பரிசு

என்ன வரம்
வாங்கி வந்தாய்
அலைப்பேசியன
என் வரங்களை
தட்டிச்செல்கிறாய்
முத்தங்களாக
எனக்கு முன்