மரங்கள்

நீயும் காதலித்தாயா ??
உன்னவள் விட்டு சென்றும்
காத்துயிருக்கிறாய்
அதே இடத்தில் !!

Advertisements

என்னவளுக்காக:பக்கம் 3/108

*
இதுவும்
ஒரு தலைகாதல் தான்
எனக்கும் காணல்நீர்க்கும்
வேற்றுமை
இல்லையெனலாம்

*
காதல்
இதற்கு வர்ணங்களை
மாற்றிவிட்டேன்
என் காதலுக்கு
மட்டும் தோல்விகள்
கிடையாது

*
என் காதலுக்கு
உருவம் கொடுக்க
ஆசைப்பட்டேன்
என்னவள் – என்பிம்பம்

என்னவளுக்காக :பக்கம் 2/108

அவள் பெயர்

*
நான் கடக்கும் பாதையில்
இருக்கும்
பெயர் பலகைகளை
உற்று பார்க்க தான்
செய்கிறேன்

*
உனது பெயரின்
ஒரு பகுதியை
கண்டு பிடித்துவிட்டேன்
மிச்சம்
இன்னும் ஆராய்ச்சியில்

*
தமிழ் எழுத்துகளுக்கு
குறுக்கு எழுத்து போட்டி
நடத்தப்பட்டது
உனது பெயரை
கண்டு பிடிக்க
பரிசு : எனது முத்தங்கள் !

என்னவளுக்காக: பக்கம் 1/108

Quote

என்னவளுக்காகதான்
ஆம் என்னவள் யேன
கூற ஆசையாகத்தான்
இருக்கிறது
ஆனால் அநாகரிகமல்லவா ??
இன்னும் முகமறியாதவளை
என்னவள் யேன கூற ..

இன்னாள் வரை
கண்டதில்லை
என் தலையனை
பங்கிட வருபவளை.
காத்துயிருக்கிறேன்
அவள் ( என்னவள் ) வருகைக்காக ..

என்னவளுக்காக : என்னுரை

Quote

என்னவள்?
யார் இவள்?
எனக்காக பிறந்தவளா?
என்னூள் கலக்கவிருப்பவளா?
என்னை
அவள் உயிராக நினைக்க இருப்பவளா?

அப்படியென்றால்
என்னவளுக்காக
கொடுக்க என்னிடம்
என்னயிருக்கிறது??

காசாக
கொடுத்தால்
அதை
காதல் என்பார்களா??

பொருளாக
கொடுத்தால்
அதை
உறவு என்பார்களா??

ஆகையால்
என்னவளுக்காக
என்ன கொடுக்க??

என்னையே
கொடுப்பேன்
என்றால்
அது
காதலின்றி காமமா??

ஆகையால்
என்னவளுக்காக
என்ன கொடுக்க??

உணர்ந்து விட்டேன்
என்னவளுக்காக
கொடுக்க
இனிவரும் காலங்களில்
எனது பக்கங்கள்……..