About விக்னேஷ்

என்னைப்பற்றி எழுத சொன்னார்கள் இப்பக்கத்தில் என்னைப்பற்றி கூற எனக்கு என்ன தகுதி இருக்கிறது?? ஆயினும் கூறுகிறேன் இந்நாள் வரை எதற்காக வாழ்கிறேன் என தெரியாமல் வாழ்ந்து கொண்டுயிருக்கும் பிணம்!! மேலும் எனது அடையால சொல் தமிழன் வெரூம் பெயரில் மட்டும் இந்நாள் வரை தமிழ்க்காவும் தமிழ் நாட்டுக்காவும் ஒரு சொட்டு வியர்வையும் சிந்தாதவன்!! எனது வளர்ச்சிக்காக ஒரு பொட்டி ( கணிணி ) பின் அழைய தொடங்கியிருப்பவன் இப்படிக்கு, பெயரில் மட்டும் தமிழனாய், நா.விக்னேஷ்

நான் படித்ததில் எனக்கு பிடித்தது .

இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள். கில்ஜி வம்சம் ஆண்டது.மொகலாயர்கள் ஆண்டார்கள்.இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்டபோது.அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை.நம் மீது திணிக்கவும் இல்லை.

உருதும் அரபும் ஆட்சிமொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் ஆங்கீகரிக்கப்பட்டே இருந்தது.பாலியும் பிராகிருதமும் வந்தபோது,தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை.ஆனால்,வெள்ளக்கார்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து,அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.வரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று,ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை.தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொன்டோம்? தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது?சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மெளனம் மட்டுமே!

புத்தகம் : எனது இந்தியா
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : ரூ 355

Advertisements

காற்றுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்

இன்றாவது நான் எழுத நினைப்பதை எழுதி முடிவு பெற செய்தல் வேண்டும்.ஒவ்வொரு முறையும் நான் எழுத நினைப்பது ஏதோ காரணத்தினால் கினற்றுக்குள் போடப்படும் வாலி தண்ணீர் எடுக்காமல் வெளியே வருவது போல என் முயற்சிகள் ஒவ்வொன்றும் குறை பிரசவத்தில் பிறந்தன.

என் எழுத்துக்கள் குறை பிரசவத்தில் பிறக்க காரணம் என்ன ? என் என்னம் எழுத்தின் மீது மட்டும் அல்லாது பிற விசங்களில் அலைப்பாய்வதாலா ? அல்ல குறையை என் மீது வைத்து கொண்டு எழுத்தின் மீது பழிப்போடுவதாலா ? அல்லது தண்ணீர் இறைக்கும் என்னத்தோடு இருந்துக் கொண்டு வாலிலை போடாமல் காத்து கொண்டு இருக்கிறேன் அதனாலா ?.அது எதுகாக இருந்தாலும் சரி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் வலி அக்குழந்தையை விட அதை பெற்று எடுத்த எனக்கு மிகவும் வலிக்க தான் செய்கிறது.

நான் எழுதி முடித்த கட்டுரைகளை விட ,முடிவு பெறாமல் கசக்கி போட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்க செய்கிறது.அப்படி கசக்கி போடப் பெற்ற கட்டுரைகளை பார்க்க நேரிடகையில் மனதிற்குள் ஏற்படும் வலிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கத்தான் வேண்டிருக்கிறது.ஆகையால் இங்கு நான் கடைசியாக கூற விரும்புவது இனி வரும் காலக் கட்டத்திலாவது நான் எழுத நினைப்பதை எழுதி முடிக்கும் திறனை நான் பெற வேண்டும். நல்ல வேலை இந்த குமுறலையாவது என்னால் முழுமையாக எழுத முடிந்தது

என் கல்லூரி பயணம்

இங்கு சொல்ல வந்தது
என்னவெறால்
நாங்கள் இறுதியாண்டு
மாணவர்கள்
எங்கள் கடமைகளுக்கும்
உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
பயணிக்கும்
தொடர்வண்டி பயணம்
இது ஆயினும் அதன்
தண்டவாளங்கள்
இனைய மறுக்கின்றன.

இங்கு
பிரியும் நேரம்
தெரிந்தே
சிரிக்க கற்றுக்கொண்டோம்
எதிரியென தெரிந்தே
அனைக்க கற்றுக்கொண்டோம்

இங்கு
சொன்ன காதலுக்கும்
சொல்லாத காதலுக்கும்
வித்தியாசம் தெரிய வேண்டுமா ??
இரண்டுக்கும்
காலகெடு தொடங்கிவிட்டது
காதலர்கள் சேர
காதலை பிறப்பிக்க

எங்கள் பாடத்திட்டம்
மிகவும் குறைவானது
எப்படி வாழ வேண்டும்
என்பதை நாங்கு ஆண்டுகளில்
கற்று கொடுத்துவிட்டு
எப்படி பிரிய வேண்டும்
என்பதை கற்றுக் கொடுக்க
தவறிவிட்டது.

இப்போது
வகுப்பறையில் விட்டு பிரிய
மனம் மறுக்கிறது
ஆசிரியர்களுக்கோ என்றும் போல்
திட்ட உதடுகள்
மறுக்கிறது
ஏன் என்றால்
நாங்கள் இறுதியாண்டு மாணவர்கள்.

இப்படிக்கு
ஆனந்தமாய் அழ
சொகமாய் சிர்க்க
தெரிந்த
பல வருத்தங்களுக்கும்
சில சந்தோசங்களுக்கும்
சொந்தக்கார்கள்
என் கல்லூரி பயணம்

காதல்

காதல் மிக சிறிய சொல்
பிரமாண்டமான சக்தி
பிரதான வேட்கை
வினோத சித்த பிரம்மை
விந்தையான மன எழுட்சி
ஆதி முழுவதும்
நாகரிக மாற்றத்தை ஜெய்த்தி
நம்மிடையே எஞ்சியிருக்கும்
பழமைகளின் ஒன்று
அது ஒருவருக்கு ஒருவரை
அடிமைபடுத்தும்

இவன்
-போராளி

ஆண் பாவம்

அவள் செய்த தவருக்காக
இத்துடன் நூறாவது
மன்னிப்பையும்
கேட்டு விட்டேன்
-ஆண் பாவம்