காற்றுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்

இன்றாவது நான் எழுத நினைப்பதை எழுதி முடிவு பெற செய்தல் வேண்டும்.ஒவ்வொரு முறையும் நான் எழுத நினைப்பது ஏதோ காரணத்தினால் கினற்றுக்குள் போடப்படும் வாலி தண்ணீர் எடுக்காமல் வெளியே வருவது போல என் முயற்சிகள் ஒவ்வொன்றும் குறை பிரசவத்தில் பிறந்தன.

என் எழுத்துக்கள் குறை பிரசவத்தில் பிறக்க காரணம் என்ன ? என் என்னம் எழுத்தின் மீது மட்டும் அல்லாது பிற விசங்களில் அலைப்பாய்வதாலா ? அல்ல குறையை என் மீது வைத்து கொண்டு எழுத்தின் மீது பழிப்போடுவதாலா ? அல்லது தண்ணீர் இறைக்கும் என்னத்தோடு இருந்துக் கொண்டு வாலிலை போடாமல் காத்து கொண்டு இருக்கிறேன் அதனாலா ?.அது எதுகாக இருந்தாலும் சரி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் வலி அக்குழந்தையை விட அதை பெற்று எடுத்த எனக்கு மிகவும் வலிக்க தான் செய்கிறது.

நான் எழுதி முடித்த கட்டுரைகளை விட ,முடிவு பெறாமல் கசக்கி போட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்க செய்கிறது.அப்படி கசக்கி போடப் பெற்ற கட்டுரைகளை பார்க்க நேரிடகையில் மனதிற்குள் ஏற்படும் வலிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கத்தான் வேண்டிருக்கிறது.ஆகையால் இங்கு நான் கடைசியாக கூற விரும்புவது இனி வரும் காலக் கட்டத்திலாவது நான் எழுத நினைப்பதை எழுதி முடிக்கும் திறனை நான் பெற வேண்டும். நல்ல வேலை இந்த குமுறலையாவது என்னால் முழுமையாக எழுத முடிந்தது

Leave a comment