கவிதை

உன்னை காணத்தான்
ஆசைப்படுகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகள் வரும்போதுயெல்லாம்.

ஆனால் உனக்கு
உருவம் இல்லையென்று
சொல்லிகொள்கிறார்களே ?
அவர்களுக்கு என்னத்தெரியும்
நீ எனக்குள் புதைந்துயிருப்பது !!

உன்னை காண
நான் ஆசைப்படும் பொழுதுயெல்லாம்
என் வழிப்பாதையில்
நீ சொர்க வாசலை
திறந்து கொண்டு
காத்திருக்கிறாய் !!

உன் மீது கொண்ட காதலால்
எத்தனை நாட்கள்
கண்விழித்து காத்துயிருக்கிறன்
தெரியுமா ?
உனது வருகைக்காக !!

நீ வந்துவிட்டு
சென்றபாதை என்றுமே
விருச்சோடி இருந்ததில்லை
இன்றும் என்னூள்
சில துளிகளை
விட்டு விட்டு செல்கின்றாய் !!

உனக்கு தெரியுமா ?
உன்னால் எனக்கு
பட்டபெயரும் வந்துவிட்டது
“கிறுக்கன்” என
ஆயினும் இன்னும்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக !!