புத்தக கண்காட்சி

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் கொடுத்த நெல்லிக்கனியை
திரும்ப பிடுங்கி கொள்ளப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்.

என்.விநாயக முருகன்

Advertisements

இணைய டைரி.

உரிமை :://cybersimman.wordpress.com
நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம்.

வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம்.

எழுத்து என்பது கலை தான் என்ற போதிலும் அதனை பட்டைத்தீட்டிக்கொள்ள படைப்பாற்றலோடு கொஞ்ச்ம பயிற்சியும் தேவை என்னும் சு ரா வின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உள்ளது.

நல்ல எழுத்தாளர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதி பார்த்துவிட வேண்டும் என்று கூறும் சு ரா வின் கருத்து இணைய உலகிற்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள் இணையம் நமது கருத்துக்களை பதிவு செய்யவும் பகிரவும் எத்தனை வசதிகளை தந்துள்ளது.வலைப்பதிவு மூலமாக வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோமோ இல்லையோ முக்கிய அனுபவங்களை பதிவு செய்யலாம்.டைரி எழுதுவது போல மனதில் தோன்றுவதை குறித்து வைத்து கொள்ள உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.

தினமும் புகைப்பத்தோடு வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய தூண்டும் தளங்களும் இருக்கின்றன.எனன் இருந்து என்ன பயன்,எதையும் இடைவிடாமல் செய்யும் குணம் தான் இல்லையே.சோம்பலும் மறதியும் வழிமறித்து கொள்வதால் இத்தகைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் சுறுசுறுப்பு கிடைக்கப்பெறுவது பெரும் பாடாக அல்லவா இருக்கிறது.

இத்தகைய சோம்பேறிகளுக்காக என்றே அருமையான ஒரு இணைய டைரி சேவை அறிமுகமாகியுள்ளது.

வாழ்க்கை குறிப்புகளை எழுத உதவும் அந்த தளம் நாள் தவறாமல் அதனை எழுதி முடிக்கவும் வழி செய்கிறது.டிவிட்டர் யுகத்தில் பலரும் மறந்து விட்ட இமெயில் துணையோடு இதனை அழகாக நிறைவேற்றுகிறது இந்த இணையதளம்.அதற்கேற்ப மிகவும் பொருத்தமாக மெயில்டைரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெயில் டைரியில் தினமும் உங்கள் வாழ்வனுபவத்தை நீங்கள் குறித்து வைக்கலாம்.டைரி எழுதுவது போல தான் என்றாலும் ஒரு நாள் உற்சாகமாக ஆரம்பித்து விட்டு மாறுநாளே மறந்து போய்விடும் அபாயம் இந்த சேவையில் இல்லை.

காரணம் இந்த தளம் தினமும் இமெயில் வாயிலாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.இதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்ட நாள்தோறும் இமெயில் வாயிலாக இன்றைய தினம் என்ன நடந்தது என்று கேள்வியை இந்த தளம் கேட்கும் .அதற்கு பதில் அளிப்பதற்காக கொஞ்சம் யோசித்து பார்த்து முக்கிய நிகழ்வுகளை குறித்து வைக்கலாம்.

நாட்காட்டி வசதியோடு இபப்டி குறிப்புகளை இடம் பெறச்செய்வதற்கான வசதியும் உள்ளது.

இது தான் என்று இல்லாமல் எல்லா வகையான விஷயங்களையும் இதில்,பகிர்ந்து கொள்ளலாம்.அனுபவங்களை மட்டும் அல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.செல்போனில் இருந்தும் அனுபவங்களை அப்டேட் செய்யலாம்.

ஒரு கட்டத்திற்கு பின் திரும்பி பாத்தால் இந்த பதிவுகள் செறிவானவையாக வியக்க வைக்கலாம்.பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோ காட்டி மகிழ கூடியவையாக இருப்பதோடு நமக்கே பயனுள்ளதாக இருக்கலாம்.

நினைத்தை அடையவும் இந்த தளம் கைகொடுக்கும்.யார் கண்டது உங்கள் அனுபவங்கள் ஒரு ஆழமான நாவலுக்கு உரியதாக கூட இருக்கலாம்.

டைரி எழுதுவதன் அருமையை புரிந்து கொள்ள பிரும்புகிறவர்கள் அனந்தரஙக பிள்ளை டைரி பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள குறிப்புகளை படித்து பார்க்க வேண்டும்.

டைரி எழுத இனைய முகவரி;

ந‌ண்பேன்டா

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
‘ வெறுப்படிக்கிதுடா மச்சான் ‘னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல ‘வெற்றி ‘ தியேட்டர்ல படம் பாக்க!
‘ கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான் .. .
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா
H.O.D ய கூட விட்டதில்ல !
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்…
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் – தவிக்க விட்டதில்ல .. .
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல.. .
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘ வெட்டி ஆபிஸர் ‘னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் …
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘ சாப்பாட்ல காரம்டா மச்சான் ‘னு
சமாளிச்சி எழுந்து போவோம்.. .
நாட்கள் நகர ,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ- மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு…
தங்கச்சி கல்யாணம் ,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
‘ இன்னிக்காவது பேச மாட்டாளா ?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ -மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ ஏண்டா பேசல ?’ ன்னு கோச்சிக்க தெரியல. .
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல !
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘ மாமா’ ‘ மச்சான் ‘ மாறாது !

எழுதியவர் : பாலமுருகன்

என்னவளுக்காக:பக்கம் 3/108

*
இதுவும்
ஒரு தலைகாதல் தான்
எனக்கும் காணல்நீர்க்கும்
வேற்றுமை
இல்லையெனலாம்

*
காதல்
இதற்கு வர்ணங்களை
மாற்றிவிட்டேன்
என் காதலுக்கு
மட்டும் தோல்விகள்
கிடையாது

*
என் காதலுக்கு
உருவம் கொடுக்க
ஆசைப்பட்டேன்
என்னவள் – என்பிம்பம்

என்னவளுக்காக :பக்கம் 2/108

அவள் பெயர்

*
நான் கடக்கும் பாதையில்
இருக்கும்
பெயர் பலகைகளை
உற்று பார்க்க தான்
செய்கிறேன்

*
உனது பெயரின்
ஒரு பகுதியை
கண்டு பிடித்துவிட்டேன்
மிச்சம்
இன்னும் ஆராய்ச்சியில்

*
தமிழ் எழுத்துகளுக்கு
குறுக்கு எழுத்து போட்டி
நடத்தப்பட்டது
உனது பெயரை
கண்டு பிடிக்க
பரிசு : எனது முத்தங்கள் !