பெண்

Quote

உரிமையாலர் :
Rajapriya G (@makkuponnunan)

கல்லூரி நாட்களில்
எவனையோ பார்த்துப் பேசி பழகி
அதைக் காதலென்றும்
அது தான் முக்கியமென்றும் கூறி
வீட்டின் மானத்தை மூட்டைக்கட்டி
அதைப்பரண் மேல் போட்டுவிட்டும்
போய்விட்டாள்-
வீட்டின் முதல் பெண்ணும் மூத்த அக்காளுமான அவள்..!

முதல் பெண் செய்த காயத்திற்கு
களிம்பு தடவ எண்ணி
அடுத்தவளை அவசர அவசரமாய்க்
கரையேற்றும் பெற்றோரின் முயற்சியின் வெற்றியாக
கொஞ்சமும் பொருந்தாத
ஒரு மாப்பிள்ளையின் கரம்பிடிக்கையில்
தனக்கென்றிருந்த பிரத்தியேக
உணர்சிகளை மூட்டைக்கட்டி
அதே பரணின் மேல் போட்டுவிட்டு
செல்கிறாள்-
வீட்டின் பேரழகியான இரண்டாம் அக்காள்!

நடந்த சம்பவங்கள் அத்தனையும்
தனக்கான பாடமெனக்கருதி
தன் கல்லூரிக்காதலை மூட்டைக்கட்டி
அதே பரணின் மேல் போட்டுவிட்டு
தன் வாழ்வைப் புதுப்பிக்க
புது மாப்பிள்ளையுடன்
இதோ புறப்படுகிறாள்-
மூன்றாமவள்..!

காதலாவது கத்தரிக்காயாவது..!
பைத்தியக்காரிகள்!
காமத்திற்கு கோட்டுசூட்டு மாட்டி
அழகுபடுத்தி
அதை வீட்டு முற்றத்திலேயே
அமரவும் வைத்து
அதற்கு ‘காதல்’ என்று
நாமகரணமும் செய்து
அதனுள்ளேயே கதகதப்பாய் ஒளிந்துகொண்டு
குளிர்காய்பவர்கள் இவர்கள்..!

அடுத்ததாய் இன்று
எனக்கு பெண்பார்க்கும் படலம்..
இதோ ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன் நான்..
முகத்தில் ஒரு மந்திரப்புன்னகையுடன்..
வரும் மாப்பிள்ளைக்கு
என்னைப்பார்த்த மாத்திரத்தில்
வந்துவிடட்டும்-
காதல்!

நான் புறப்படுகையில் என் பங்கிற்கு
அதே பரணின்மேல்..
எனது புதுமைவாதச் சிந்தனைகளை
உள்ளடக்கி
நானும் ஒரு மூட்டைக்கட்டி
வைத்துவிட்டுப் போகிறேன்-

அடுத்த வீட்டு அடுப்படிக்கு..!!

-பெண்

Advertisements

என்னவளுக்காக : என்னுரை

Quote

என்னவள்?
யார் இவள்?
எனக்காக பிறந்தவளா?
என்னூள் கலக்கவிருப்பவளா?
என்னை
அவள் உயிராக நினைக்க இருப்பவளா?

அப்படியென்றால்
என்னவளுக்காக
கொடுக்க என்னிடம்
என்னயிருக்கிறது??

காசாக
கொடுத்தால்
அதை
காதல் என்பார்களா??

பொருளாக
கொடுத்தால்
அதை
உறவு என்பார்களா??

ஆகையால்
என்னவளுக்காக
என்ன கொடுக்க??

என்னையே
கொடுப்பேன்
என்றால்
அது
காதலின்றி காமமா??

ஆகையால்
என்னவளுக்காக
என்ன கொடுக்க??

உணர்ந்து விட்டேன்
என்னவளுக்காக
கொடுக்க
இனிவரும் காலங்களில்
எனது பக்கங்கள்……..

போகாதே போகாதே

படம்:தீபாவளி

பாடல்:போகாதே போகாதே

கல்லரையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்பேனடி

கண்மூடி திறக்கும் போது ..

படம் : சச்சின்
பாடல் : கண்மூடி திறக்கும் போது ..
உயிருக்குள்
இன்னோர் உயிரை
சுமக்கின்றேன்
காதல் இதுவா

காற்றே என் வாசல் காற்றே

படம் : ரிதம்
பாடல் : காற்றே என் வாசல் காற்றே …

நெடுங்காலம் சிற்பிக்குள்ளே
உருண்டு இருக்கும்
முத்து போல்
என் பெண்மை
திறந்து நிற்கிறதே…

திறக்காதா
சிற்பி என்னை
திறந்து கொள்ள சொல்கிறதே
என் நெஞ்சம்
அருண்டு நிற்கிறதே…