எனது பேருந்து பயணம்

இது என் பக்கங்களில் இடம் பெறும் என்று இந்நாள் வரை நினைத்ததில்லை .ஆனால் நான் கண்ட காட்சி என்னையும் என் வலைப்பில் குமுறச் செய்துவிட்டது.நான் தனியார் கல்லூரில் படிக்கும் மாணவன் (கல்லூரியின் பெயரை கூற விரும்பவில்லை).நான் விடுமுறை நாட்களில் ஈரோடில் இருந்து மைசூர் செல்லும் பேருந்தில் செல்வது வழக்கம்.இம்முறை திபாவளி விடுமுறை என்பதால் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.ஆயினும் பேருந்து நிலைத்திற்கு சற்று சீக்கிரம் வந்த காரணத்தினால் பேருந்தில் அமர இடம் கிடைத்தது.பேருந்து சிறிது நேரத்தில் தொடங்கியவுடன் புத்தகம் புரட்டியும் நண்பர்களுடன் பேசிக் கொண்டும் நேரத்தை கழித்து கொண்டு இருந்தேன்.சிறிது நேரம் கழித்து நான் இறங்க வேண்டிய சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அப்போது நூற்றுக்கும் அதிகமானவர்கள் இப்போருந்தில் மைசூர் செல்ல காத்திருந்தனர்.எங்களுக்கு வழி விடாமல் அடைத்து கொண்டும் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு சீட் போட்டுக் கொண்டு இருந்தார்கள்(இது என்றும் நடக்கும் செயல்).ஆனால் நான் கண்ட காட்சி அதுவல்ல.அவர்களின் ஒருவர் அவருடைய கைகுழந்தயிடம் அம்மா வந்துவிடுவார் என கூறி சீட்டுக்குள் போட முயற்சி செய்து கொண்டு இருந்தார்.அக்குழந்தை அழ தொடங்கியதால் அவர் அம்முயற்சியை கைவிட்டார்.

இக்காரியத்தை கண்டவுடன் என் நாட்டு மக்களின் மனநிலமையை என்னால் உணர முடியவில்லை.ஒரு சீட்டுக்காக தான் பெற்ற குழந்தையின் உயிருடன் விளையாடுவதா??
இது எங்கு சென்று முடியும்??

Advertisements

முத்தம்


அவள் முத்தமிட்ட
காகிதமா இது??
நான் எழுதும் எழுத்துக்கள்
கூட சிவக்க தொடங்கிறது..

4. பொன்மொழி


ஒரு ஆண் தான் ஒரு
பெண்ணின் முதல்
காதலனாக இருக்க
விரும்புகிறான்
பெண்ணோ ஒரு ஆணின்
கடைசிக் காதலாக
இருக்க விரும்புகிறாள்

–ஆஸ்கர் ஓயில்டு

காதல் காதலாய் இல்லை

காதலே
நான் கேட்க மறந்துவிட்டேன்
உனக்கேன என் மீது
அத்தனை கோபம்
நீ கோபப்படுவாய்
அவளுக்கு கூட்டாளி
நீ அல்லவா…

நீ பெண் இனத்தை
சேர்ந்தவளோ ??
என் வேதனை உனக்கு
என்ன தெரியும்??

நான்
என்ன செய்தேன்
எனக்கே தெரியாமல்
அவளை காதலித்தேன்…

அவளும் குற்றம்
என்றால்
நீயும் ஏற்க
மறுத்தாய்…

நான் புரிந்து
கொண்டேனடி
காதல்
காதலாய் இல்லையென்று…

தற்போது
என் காதல்
அவள் காலடியில் மட்டும்….

3.பொன்மொழி

நான் உன்னைக்
காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும்
அது.
சூரியன் குளிர்ந்துபோகும்
வரை
நட்சத்திரங்கள்
முதுமையடையும் வரை
நான் உன்னைக்
காதலிப்பேன்

–ஷேக்ஸ்பியர்