சிசு

சில காலங்கள்
சில மணித்துளிகள்
சில மாதங்கள்
என்னை சுமந்ததற்காக
உயிர் விடுகிறேன்
தாய் என்னும் வார்த்தை
கூறும் முன்னே
தாயின் வேதனை போக்குவதற்காக…………

Advertisements

கல்லறைத் தோட்டம்


எனது இல்லத்தில்
உன்னுடன் இல்லறம்
நடத்த
ஆசைப்படுகிறேன்
என்று நிறைவேறுவது
இந்த கல்லறைத்தோட்டத்தில்

காதல் சரித்திரம்


எங்கள் காதல்

சுவடுகளும்

பதிக்கப்படுமா காதல் சரித்திரத்தில் ??

எங்கள் குடும்ப சூழ்நிலையால்…

என் கருத்தம்மா

என்

பெயரை சொல்லக்கூட

தயங்குகிறாயே

இன்றே ஏற்றுக் கொண்டாயே

உன் கணவன் என

(என் காதலை சொல்லியபோது)

காண கண்ட காதல்

அந்த நாள் இன்னும் நினைவுயிருக்கிறது
அப்பெருஞ்சோலை
பல்லாயிரக்கணக்கான பறவைகள்
திக்கு திசை தெரியாமல் திரியும் செல்வங்கள்
விண்ணை பதம் பார்த்த வான வேடிக்கைகள்
கண்ணை பறிக்கும் அவ்வேலையிலே
நான் காண துடித்த அப்பாவை…..