வரபிரசாதம்

வரங்கள் தேவையில்லை
சற்றே சுற்றினால்
போதும் குப்பைதொட்டியை
குழந்தைற்காக…

காதல் அழிவதில்லை

என்றோ
எங்கோ பிறந்து
இன்றே
என்னுடன் கலந்து
என்றும்
என்னுடன் இருப்பாய்யென்று
என்றே என்னினேன்
ஆகையால் அன்றே
நினைத்ததை
இன்றே
எழுதுகிறேன்
அழிவதில்லை…
காதல் அழிவதில்லை…

ஆழிபேரலை

அச்சம்
எழுந்தது உன் அருகில் இனி வர
அய்யம்
எழுந்தது உன் இதல்களை தொட்டு
விளையாட….

ஏனடி
உனக்கு இத்தனை கோபம்
உன்னை உள்ளத்தில் வைத்தவரை
உனக்குள் இழுத்து சென்றாயே
உனக்கேன அத்தனை பசியா…..

உன்னை வாழ்க்கையாக நினைத்தவர்களை
தற்போது வாழ்க்கையை இழந்தவர்கள்
இனியும் ஆக்காதே
உன்குல பெண்களை வாழவெட்டியாய்…..

பள்ளிகூடம்

கணவுகளின் தொழிற்சாலை
அதனால் என் வாழ்க்கையோ மலர்சோலை
அதுவே சுமைதாங்கி
அதன் மீது என் சுமைகளை இறக்கி
திரும்புகிறேன்
பள்ளிவாசம் என வனவாசம் முடிந்து….

இனி
என்றும் திரும்பாது அக்காலம்
அதுவே
என் கைகளுக்கு எட்டா கணாகாலம்…..

அறியாத வயதில்
புரியாத மொழிகளையும் புரியவைத்து
தெரியாத கலைகளையும் தெரியவைத்து
என்னை பலர் அறிய செய்தது
ஒருவனாய் வந்தவனை
ஒருவர் அன்றி
பலர் உள்ளத்தில் உறங்க செய்தது….

இன்று
“இறங்கல் அஞ்சல்”
என் பள்ளி வாழ்க்கைக்கு
இனி
“கணவுகளில் மட்டும் கணவுகளாய்”…..

போராட்டம்

துடிக்கும் கரங்களுக்கு
துண்டில் போட்டால்
லட்சியங்கள் லட்சங்களாய்
கிடக்கும் உன்னிடம்
அலட்சியமான உனது போக்கால்
உனது வாழ்வின் லட்சியம்
அஷ்ட கோணத்துடன் திரிகிறது….

முயற்சி என்னும் முயளும் தன்மையை
நி முயளாமல் இருந்து விட்டாள்
உன் உயிர் முடியும் வரை
நி மூளையில் கிடந்து இருப்பாய்….

எலுச்சியுடன் போராட
ஏழை என்பது இல்லையடா
ஏளன சிரிப்பு சிரிப்பவரை
கண்டும் காணமல் போராடு
உனது லட்சியத்திற்காக…